கனடா தினத்தை முன்னிட்டு இலவச உணவு வழங்கல்

6 months ago


கனடா தினத்தை முன்னிட்டு கனடாவில் அமைந்துள்ள மென்டரின் உணவகங்கள் இலவச புஃபேக்களை வழங்கியுள்ள நிலையில், அந்த உணவகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இலவச புஃபே மதியம் முதல் இரவு 8 மணி வரை வழங்கப்பட்டுள் ளதாக தெரியவருகின்றது. மென்டரின் உணவகங்களில் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் உள்ளன.

குளிர்பானங்கள், தேநீர், காபி உட்பட அனைத்து உணவுகளும் அங்கு காணப்படுகின்றன.

ஒன்ராரியோவில் 30 இடங்களில் மென்டரின் உணவகங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணவு வேளைக்கு முன்பிருந்த மக்கள் வரிசையில் காத்திருந்தமை யால் சில உணவகங்களில் 

கூட்டத்தை சமாளிக்க முடியாதிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாக முன்பதிவுகளுடன் உணவகங்களில் உணவு வழங்கும்

வழக்கம் கொண்ட மென்டரின் உணவகம், கனடா தினத்தில் மாத்திரம் முன்பதிவு ஏற்றுக்கொள்ளாது உணவு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்