அணு ஆயுதம் தயாரிக்க பெரிதும் உதவும் யுரேனியம் செறிவூட்டல் இடத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது.

3 months ago


அணு ஆயுதம் தயாரிக்க பெரிதும் உதவும் யுரேனியம் செறிவூட்டல் இடத்தை வடகொரியா வெளியிட்டுள்ளமை உலகளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

உலகின் வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுக ளுக்கு வடகொரியா கடும் சவாலாக விளங்கி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அணு ஆயுதம்தான்.

எப்போதெல்லாம் தென்கொரியா வுடன் இணைந்து அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் போர்ப் பயிற்சி மேற்கொள்கிறதோ, அப்போதெல்லாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைச் சோதனை செய்து பதிலடி கொடுப்போம் என வடகொரியா அச் சுறுத்தும்.

அமெரிக்காவின் மையப்பகுதியை சென்று தாக்கும் அளவிற்கு தங்களிடம் அணு ஆயுதம் உள்ளது என வட கொரியா சொல்லி வருகிறது. எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டமாட்டோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சமீபத்தில் அணு  ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் பணிகளை இன்னும் துரிதப்படுத்துமாறு கிம் ஜாங் உன் வலியுறுத்திருந்தார்.

இது வழக்கம் போல் கிம் ஜாங் உன்னின் மிரட்டலாக இருக்கும் என உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்தன.

இந்நிலையில் யுரேனியம்              செறிவூட்டல் அதிக அளவில் உற்பத்தி செய்யும் வசதிகளை வடகொரிய அதிபர் பார்வையிடுவது போன்ற படம் வெளியாகியுள்ளது.

யுரேனியம் செறிவூட்டல் மையத் திற்கு எப்போது சென்றார் என்பது உறுதியாகவில்லை. எனினும் வடகொரியா அணு ஆயுதங்களை அதிக அளவில் பெருக்குவதில் உறுதியாக உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

வடகொரியாவின் தற்பாகாப்பிற்கான அணு ஆயுதங்களை அதிகரிக்க வேண்டும் என்பதால், யுரேனியம் செறிவூட்டலை - வசதிகளை          அதிகரிக்க கிம் ஜாங் உடன் வலியுறுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே அந்த இடங்களுக்குச் சென்றுள்ளார் எனத் தகவல் கூறப்படுகிறது.

2006ஆம் ஆண்டு முதன்முறையாக வடகொரியா அணுஆயுத சோதனை மேற்கொண்டது. அப்போது ஐ.நா. வடகொரியாவுக்குத் தடை விதித்தது.

அதன்பின் தற்போது யுரேனியம் செறிவூட்டல் வசதியை வடகொரியா வெளியிட்டுள்ளது.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த இந்தப் படத்தை பதிவிட்டிருக்கலாம்.

வரவிருக்கும் அமெரிக்க அரசு வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது சாத்தியமற்றது என்பதை உணர வைக்க இப்படிச் செய்திருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்