மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா இன்று காஞ்சரங்குடா மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது
2 months ago



மட்டக்களப்பு, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (14) காஞ்சரங்குடா மாணிக்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
கலாசார திணைக்களப் பிரிவின் ஒழுங்கமைப்பில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் காஞ்சிரங்குடா கிராம பொது அமைப்புக்களும் இணைந்து, இந்தப் பொங்கல் விழாவை நடத்தினர்.
பாரம்பரிய முறைப்படி வயலில் நெல் அறுவடை இடம்பெற்று, விஷேட பூசை வழிபாடுகளுடன் பொங்கல் இடம்பெற்றது.
இதன் போது ஆலய முன்றிலில் பாரம் பரிய சம்பிரதாய முறையில் கரகம், கூத்து, வயல் அறுவடை பாடல் உள்ளிட்ட பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
