"13 தொடர்பில் எல்லோரும் ஒற்றுமையாக கோரவில்லையாம். ஒவ்வொரு நிலைப்பாட்டை சொல்கிறீர்களாம்” -இந்திய தூதுவர் நழுவல்-
"13 தொடர்பில் எல்லோரும் ஒற்றுமையாக கோரவில்லையாம். ஒவ்வொரு நிலைப்பாட்டை சொல்கிறீர்களாம்” -இந்திய தூதுவர் நழுவல் போக்கு.
“ஜனாதிபதி அநுரகுமாரவுடன் இணைந்து நாம் பணியாற்றுவோம். இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கும்”, என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், யாழ்ப்பா ணம் சர்வதேச விமான நிலையத்தை பெரிய விமானங்களும் தரையிறங்கக் கூடிய வகையில் விஸ்தரிப்பதற்கு இந்தியா ஆதரவளிக்கும்.
இதே போன்று, மன்னார் இராமேஸ்வரம் படகு சேவையை விரைவாகத் தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் - என்றார்.
இந்தியத் தூதுவரி டம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தற்போதைய அரசாங்கம் அதிகாரப் பகிர்வுக்கு எதிராகவே கடந்த காலங்களில் செயல்பட்டது.
அத்துடன், 13ஆம் திருத்தச் சட்டத்தைத் தொடர்ச்சியாக எதிர்த்து வருபவர்கள். எனவே, அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்”, என்று வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர், "நீங்கள் இதனை எல்லோரும் இணைந்து ஒற்றுமையாக கோரவில்லை. ஒவ்வொருவர் ஒவ்வொரு நிலைப்பாட்டை சொல்கிறீர்கள்”, என்று கூறினார்.
அவருக்கு பதிலளித்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள், "13ஐ நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்குமாறு நாம் இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் ஒற்றுமையாகக் கோரியுள்ளோம்.
ஒரே யொரு (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தரப்பு மட்டுமே அதில் கையொப்பமிடவில்லை”, என்று கூறினர்.
அத்துடன், "மாகாண சபைகளுக்கான தேர்தலையேனும் உடனடியாக நடத்துமாறு அழுத்தம்”, கொடுக்க வேண் டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்தார்.
அவருக்கு பதிலளித்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்,
“தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வதால் வாக்குகள் சிதறடிக்கப்படும். இதனால், பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் ஒன்றாக போட்டியிடவே விரும்புகிறோம்.
எனினும், இது உடனடியாகச் சாத்தியமில்லை. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயல்பட்டபோது எங்களுக்கு கசப்பான அனுபவங்கள் உள்ளன.
இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்.”, என்று கூறினர்.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம் பித்த இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்திருந்தது.
இந்த சந்திப்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் த. சித்தார்த்தன், சுரேஷ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராசா, ப. சத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.