மாவீரன் பண்டாரவன்னியனின் 221 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

4 months ago


முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 221 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இன்றையதினம் (25.08.2014) காலை முல்லைத்தீவு நகரில் உள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி நினைவுகூரல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இ.ஜெகதீசன், தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஜீவன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஆங்கிலேயரின் கோட்டையை 1803ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் போரிட்டு கைப்பற்றி, இரண்டு பீரங்கிகளையும் மாவீரன் பண்டார வன்னியன் கைப்பற்றிய நாளாக இன்றையநாள் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தேசிய வீரன் மாவீரன் பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு நாள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் இன்று (25) இடம்பெற்றது.

இதன்போது, பண்டாரவன்னியனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், அவர் தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன. 

வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, முதன்மை அதிதியாக கலந்து கொண்டதுடன் உள்ளூராட்சி உதவிஆணையாளர் தெ.ரதீஸ்வரன், மற்றும் பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.