ஜனாதிபதித் தேர்தலில் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் அற்றுப்போகிறது.

3 months ago


ஜனாதிபதித் தேர்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் அற்றுப்போவதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு பவ்ரல் அமைப்பினால் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், ருகுணு மற்றும் களனி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் அற்றுப் போவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை, நாள் முழுவதும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுவதால் தூரப் பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்கள் இந்த பிரச்னையை எதிர்நோக்குவதாக மனித உரி மைகள் ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்கு பல்க லைக்கழக உபவேந்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

அண்மைய பதிவுகள்