துன்னாலையில் சுற்றிவளைப்பு; 17 சந்தேகநபர்கள் நேற்று கைது!

5 months ago



யாழ்.வடமராட்சி  துன்னாலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக் கையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லியடி பொலிஸ் பிரிவில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

இதன்போதே 17 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் திறந்த பிடியாணைகள், பிடியாணைகள், கசிப்பு விற்பனை போன்ற குற்றங்களுடன் தொடர்புடையவர்களாவர்.

கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



அண்மைய பதிவுகள்