யாழிற்கு மீண்டும் வருகை தந்துள்ள தென்னிந்திய நடிகை ரம்பா
தென்னிந்திய திரைப்பட நடிகை ரம்பா மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் (31.07.2024) வருகை தந்துள்ளார்.
தனியார் விமானம் ஒன்றின் ஊடாக யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்தடைந்துள்ளார்.
ரம்பா குடும்பத்தினரால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்ற தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் இவர் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்ற ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெப்ரவரி(6) அன்று வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.