யாழ்.வடமராட்சியில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

2 months ago


யாழ்.வடமராட்சியில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று வியாழக்கிழமை காலை அவரின் சடலம் மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வடமராட்சி - கரணவாய் தெற்கு - மாந்தோப்பைச் சேர்ந்த குணராஜலிங்கம் ஞானேஸ்வரி (வயது 70) என்பவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி உறவினர்களின் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினமே வீடு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை எரியுண்ட நிலையில் அவரின் சடலம் மீட் கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற கரவெட்டி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன்              விசாரணைகளை மேற்கொண்டார்.

தடயவியல் பொலிஸாரும் தடயங்களை பெற்றுக்கொண்டனர்.

சடலம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் பிரேத  பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.