முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இருந்து மல்லாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் வேகக். கட்டுப்பாட்டை இழந்து மாங்குளம் வன்னிவிளாங்குளம் ஐந்தாவது மைல் கல் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவத்தில் மாங்குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதான விஜயகுமார் விதுசன் மற்றும் 23 வயதான ஜெயகுமார் விதுசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, 31 வயதான மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.