முல்லைத்தீவு-சிலாவத்துறையில் தீயினால் ஒருவர் உடல் கருகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிப்பு
4 months ago

முல்லைத்தீவு-சிலாவத்துறை பகுதியில் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என்பதுடன், அவர் தனது மகனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.
குளிரான காலநிலை காரணமாக வீட்டுக்குள் பற்ற வைக்கப்பட்ட தீ பரவியதில் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
