உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தொழில்துறை திணைக்களம் இணைந்து நடத்தும் கலாச்சார திருவிழா.
உணவு கைப்பணி பொருள் சந்தை மற்றும் கலாச்சார திருவிழாவானது யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக காலை 10 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நாளைய தினமும் தொடரும் இந் நிகழ்வில் அனைவரும் பங்கு கொள்ள அழைக்கின்றனர்.
விசேட விதமாக மனை பொருளியல் மாணவர்களினால் அமைக்கப்பட்டுள்ள "Millet Spoon" Food Stall இல் சிறுதானிய உற்பத்திகள் மற்றும் புதிய வகை உணவுகள் மற்றும் பானங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
எனவே மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அனைவரும் சென்று பயனடைவோம்