கனடா நிதர்சனம் சொல்ல விரும்புவது:-

1 month ago



கடைா நிதர்சனம் சொல்ல விரும்புவது:-

ஒரு தூய்மையான சுதத்திரமான காற்று இந்த மண்ணில் வீசத்தொடங்கியுள்ளது, நிரந்தரமாக வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.

ஆனால் இந்த மண் இன்னும் நிறையவே சுத்திகரிக்கப்பட வேண்டும்.

கடந்த இருண்ட யுகம் முழுவதும் தமது சுயநலத்துக்கான சிந்தனைகளோடு அரசியல் கதிரைகளை அலங்கரித்தவர்களை மக்கள் நிராகரித்துள்ளார்கள்.

உண்மையான யதார்த்தத்தை உணர்த்து கொள்வோம். இவர்களை ஒன்று சேர்த்து மீண்டும் கூப்பாடு போடாதீர்கள்.

சுத்தமாக உள்ள உங்கள்  சட்டைகளில் சேற்றை வாரி இறைத்துக் கொள்ளாதீர்கள்.

பொறுமையுடன் 5 வருடங்கள் காத்திருப்போம்!

எமக்கான சுதந்திரத்தையும், உரிமையையும் சரிசமமாக இருந்து பேசித் தீர்ப்போம்.

இரண்டாவதாக ஒரு முக்கிய விடயம்,

வடக்கு கிழக்கு மாகாணங்களில், புலம்பெயர் தேசங்களில் இருந்து நிறைய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு படை எடுக்கவுள்ளாதாக ஒரு செய்தி,

புதிய அரசாங்கத்தில் இதற்கான அமைச்சை திறந்துள்ளார்கள்.

அதற்கான பொறுப்பில் உள்ள அதிகாரிகளை சந்தித்து நேரிடையாகவே அதற்கான வெளிப்படைத் தன்மைகள் சட்டரீதியான ஆவணங்களை தயார் செய்து மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுக்க முடியும்,

மிகவிரைவில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இந்த முதலீட்டுத் திட்டத்தில் நிதி மோசடிகள் நடப்பதை தடுப்பதற்கு ஒரு விழிப்பு விசாரணக்குழு (FRAUD PRIORNT INVESTI CATION TEAM) உருவாக்கப்படவுள்ளது என்பதை  அறியத்தருகின்றோம்.

-நிர்வாகம்-