



மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (20) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளதோடு, வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
