அம்பாறை தமிழ் கட்சிகள் அனைத்தும் ஓரணியாக போட்டியிட வேண்டும். இல்லையேல் ஆதரவு அநுரவுக்கு.-- சிவில் சமூக அமைப்பு எச்சரிக்கை

2 months ago



அம்பாறை மாவட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியாக போட்டியிட வேண்டும். இல்லையேல் நாம் அநுரகுமாரவின் கட்சியை ஆதரிக்க நேரும் என்று அந்த மாவட்டத்தின் மக்கள் சார்பில் சிவில் சமூக அமைப்பு எச்சரித்துள்ளது.

இது தொடர்பில், சிவில் சமூக அமைப்பினர் நடத்திய கலந்துரையாடலில்                  தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம்                            பாதிக்கப்படுகின்றது.

1994 முதல் 2020 வரை அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையின்மையால் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட் டது.

இதேபோன்றதொரு துர்ப்பாக்கிய நிலை கடந்த முறையும் நடந்தது. தற்போதும் இந்த நிலைமை உள்ளது.

எனவே அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக போட்டியிட வேண்டும்.

இல்லையேல் நாம் தேர்தலில்       அநுரவின் தேசிய மக்கள் சக்தி கட் சிக்கு வாக்களிக்க நேரும் -என் றனர். 

அண்மைய பதிவுகள்