இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 84 அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும்- தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு.
6 months ago

அங்கீகரிக்கப்பட்ட 84 அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுதவிர, சுயேச்சை குழுக்கள் சார்பிலும் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியும் என்றார்.
இதேநேரம், ஒரு கட்சியின் சார்பில் மாவட்ட ரீதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் எண்ணிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும். விகிதாசார முறைமையூடாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
