தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாக வர்த்தகரிடம் 50 கோடி ரூபா பணம் பெற்றதான செய்தியை மறுப்பதாக 02 அரசியல் கட்சிகள் தெரிவிப்பு
தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாகக் கூறி கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 50 கோடி ரூபா பணம் பெற்றதாக வெளியான செய்தியை மறுப்பதாக, இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை வழங்குவதற்காக கோடீஸ்வர வர்த்தகரிடம் இருந்து இந்தத் தொகை பெறப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எம்.பி பதவி வழங்கப்படாத கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கட்சி அலுவலகத்துக்கு சென்று ரவுடித்தனமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிலதிபர் தான் கொடுத்த 50 கோடி ரூபாயை திருப்பித் தருமாறு கோரியுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவிக்கையில்-
தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாகக் கூறி எமது கட்சிக்கு இதுவரை பணம் பெறவில்லை-என்றார்.
இது தொடர்பில் பொதுஜன பெரமுனவிடம் வினவிய போது, தமது கட்சியும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக, அதன் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா தெரிவித்தார்.