றொரன்ரோ பெருநகரம் முழுதும் வாகனங்களைத் திருடிய கும்பல் எட்டுப் பேருக்கு எதிராக 55 குற்றச்சாட்டுகள்.
றொரன்ரோ பெருநகரம் முழுதும் வாகனங்களைத் திருடிய கும்பல் எட்டுப் பேருக்கு எதிராக 55 குற்றச்சாட்டுகள்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக றொரன்ரோ பெருநகரம் முழுவதும் உயர்தர வாகனங்களைத் திருடிய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினைச் சேர்ந்த எட்டு ஆண்கள் மீது ஹோல்டன் பிராந்திய பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல மாத விசாரணையில் இதுவரை 55 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட் டுள்ளன என ஹோல்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டு பிணை விசா ரணைக்காகக் காத்திருக்கின்றனர், மேலும் நான்கு பேரிற்கு கனடா முழுவதும் பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில், குறைந்தபட்சம் 40 வாகனங்கள், முதன்மையாக புதிய மொடல் வாகனங்கள் மற்றும் சுமார் 3 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள சொகுசு லெக்ஸஸ் வாகனங்கள் ஆகியவற்றைக் குழு திருடியுள்ளதாக பொலிஸார் குற்றம் சாட்டினர்.
வாகனங்கள் கடல் கொள்கலன்க ளில் ஏற்றப்பட்டு மொன்ட்ரியல் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, துபாய் மற்றும் மொராக்கோவிற்கு அனுப்பப்பட்டன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.