சர்வதேச விசாரணைக்குச் செல்ல நீதி அமைச்சர் அலி சப்ரி தயாரா?--ரெலோ பகிரங்க சவால்-

4 months ago


காணாமலாக்கப்பட்டோர் எத்தனை பேர் என்ற வாய்க் கணக்குகளைச் சொல்வதை விடுத்து, சர்வதேச விசாரணை நடத்துவதன் மூலமாகவே சரியான கணக்கினை அறிந்து கொள்ள முடியும். அப்பொழுதுதான் யார் பொய் சொல்லுகிறார்கள். யார் உண்மை சொல்லுகிறார்கள் என்பது வெளி வரும். அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். அதை விடுத்து காலத்துக்கு காலம் வெளிவிவகார அமைச்சர்களாக வருபவர்கள் தங்கள் மனக்கணக்குகளின் படி காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கையைக் கூறுவது அபத்தமாகும்.

இவ்வாறு ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன் வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:-

சர்வதேச பிரதிநிதிகளால் வெளி யிடப்பட்ட அறிக்கைகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். காணாமலாக்கப்பட்டு இருக்கலாம் என்று சனத்தொகை மதிப்பீட்டின் விசாரணையை கோருவதே சாலச் சிறந்தது என்று தெளிவாக வெளிப் படுத்தி நிற்கிறது. அவர் கூறும் எண் ணிக்கையை தமிழ் மக்களோ சர்வதேச பொறிமுறைகளோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் வெளிவிவகார அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

அடிப்படையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த உண்மையைக் கண்டறிவது அரசினுடைய கடமை. அதற்கான நியாயபூர்வமான விசாரணையை நடத்துவதும் அரசின் கடமை. உள்ளுார் விசாரணைகளின் மூலம் நீ பொய் சொல்லுகிறாய், நான் பொய் சொல்லுகிறேன் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதனால்தான் சர்வதேச விசாரணை கோரப்படுகிறது. சர்வதேச விசாரணையின்மூலமே சரியான தரவுகளையும், காணாமலாக்கப்பட்டவர்களுடைய ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய எண்ணிக்கையும் அறிந்து கொள்ள முடியும்.

இதனால் தான் நாம் சர்வதேச விசாரணையை கோருவதோடு ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரும் மனித உரிமை பேரவையும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிற்கும் நிலையே நீடிக்கினறது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினுடைய கருத்தும் சர்வதேச விசாரணையை கோருவதே சாலச் சிறந்தது என்று தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது. அவர் கூறும் எண் ணிக்கையை தமிழ் மக்களோ சர்வதேச பொறிமுறைகளோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் வெளிவிவகார அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

காலத்துக்கு காலம் வாய் கணக்கு களை வெளியிடுவதை விடுத்து இம்முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எதிர்கொள்ள இருக்கும் பிரேரணைக்கு இண அனுசரணை வழங்கி சர்வதேச விசாரணை மூலமாக பொறுப்பு கூறல் நல்லிணக்கத்திற்கு அரசு தயாராக வேண்டுமே தவிர இந்த மாதிரியான கருத்துக்கள் எந்த முடிவுக்கும் இட்டுச் செல்லா.

சரியான கணக்குகளை அறிந்து கொள்ள அமைச்சர் அலி சப்ரி அவர்கள் சர்வதேச விசாரணைக்கு தயாரா? என்பதற்கு அவர் பதில் கூற வேண்டும். என்று உள்ளது.