இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்,வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட 9 பேரின் கணக்கறிக்கை தொடர்பில் விசாரணை

1 day ago



இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின்போது, யாழ்ப்பாணம் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட ஒன்பது தரப்புக்களின் கணக்கறிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் வழங்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைக்குழு வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமையவே யாழ்ப்பாணம் பொலிஸாரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் என்ற ரீதியில் குருசாமி சுரேந்திரன், சசிகலா ரவிராஜ், அருள்பரன் உமாகரன், சிவப்பிரகாசம் மயூரன், தம்பியையா கிருஷ்ணானந்த், இராமநாதன் அர்ச்சுனா, கௌசல்யா நரேந்திரன் ஆகிய வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கட்சிகள் என்ற ரீதியில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் சுயேச்சைக்குழு 17 ஆகியவற்றுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சசிகலா ரவிராஜுக்கு எதிராக ஏற்கனவே வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.