சட்டவிரோத பணப் பரிமாற்றம் தி. மு. கவின் எம். பி. ஜெகத்ரட்சகனுக்கு சட்ட அமுலாக்கத் துறை 908 கோடி (இந்திய) ரூபாய் அபராதம் விதிப்பு.

4 months ago


சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி தி. மு. கவின் எம். பி. ஜெகத்ரட்சகனுக்கு சட்ட அமுலாக்கத் துறை 908 கோடி (இந்திய) ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதுதொடர்பாக அமுலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட் சகன், அவரின் குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு சோதனை நடைபெற்றது. இதில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ. 89.19 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பிறகு, நீதிமன்ற உத்தரவால் கடந்த 2021 பெப்ரவரியில் பறிமுதல் உத்தரவு இரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் அமுலாக்கத்துறை மேல் முறையீடு செய்தது. இதில், ஜெகத்ரட்சகன் குடும்பத்தினரின் முதலீடுகள் தொடர்பில் விசாரிக்கப்பட்டன. தொடர்ந்து, ஜெகத்ரட்சகனின் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்று உத்தரவிட்டது.

இதையடுத்து, அவரின் 89.19 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்துடன், விதிமீறல்களுக்காக 908 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

அண்மைய பதிவுகள்