யாழ்.பருத்தித்துறை பொன்னாலை வீதியைப் புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரதப் போராட்டம்
3 months ago







யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொன்னாலை வீதியைப் புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உட்பட்டு வரும் சுமார் 12.8 கிலோமீற்றர் நீளமான வீதியைப் புனரமைக்கக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர்.
இதன்போது,"எமது வீதி எமக்கானது”, "புதிய அரசே புது வீதி அமைத்து தா?", "ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?", "வல்வெட்டித்துறை எனும் ஊர் நடுவில் வந்ததால் வஞ்சிக்கப்பட்டதா?", "தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
