முதலாவது உலகப் போரின் போது உயிரிழந்த கனடிய இராணுவ வீரரின் உடல் நியூபவுண்லாண்ட்டில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதலாவது உலகப் போரின் போது பிரான்ஸ் களத்தில் போராடி உயிரிழந்த இனந்தெரியாத கனடிய இராணுவ வீரரின் உடல் இறுதியாக கனடாவை வந்தடைந்தது.
நியூபவுண்லாண்ட் மற்றும் லெப்ர டோர் நகரில் ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
சுமார் நூறு வருடங்களுக்குப் பின்னர் இந்த இராணுவ வீரரின் உடல் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நியூபவுண்லாண்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் 1916ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி பிரான்ஸ் களத்தில் போராடி, 68 பேர் மாத்திரமே உயிர்தப்பியமை குறிப்பிடத்தக்கது.



அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
