யாழ்.சாவகச்சரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளரான பெண் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்



யாழ்.சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணி புரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் ஆறுமாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையில், ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணி இடம்பெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுக்கை அறையில் மெழுகுதிரி எரிந்து ஏற்பட்ட தீ விபத்தே இதற்குக் காரணம் என்று அவர் முன்னரே தனது வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் (வயது 35) என்ற உதவி பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு ஏற்கெனவே ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. கணவர் கோப்பாய் பிரதேச செய லாளர் பிரிவில் கிராம சேவையாளராகப் பணி புரிந்து வருகின்றார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
