உதயநிதிக்கு தமிழக அமைச்சரவையில் மூன்றாம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்ட அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர். துணை முதல்வருக்கான செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.
இதன் படி, அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக தலைமைச் செயலகம் வந்து அமைச்சராக பொறுப் பேற்றுக் கொண்டார்.
அவர் முன்னதாக அமைச்சராக இருந்தபோது ஒதுக்கப்பட்டிருந்த அறை வேறு யாருக்கும் வழங் கப்படாமல் இருந்ததால், அதே அறையில் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இதேவேளை, தமிழக அமைச்சரவையில், முதல்வர் மு. க. ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன் ஆகியோருக்கு அடுத்ததாக 3ஆவது இடத்தில் துணை முதல்வர் உதயநிதிக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.