மருத்துவர் வரதராஜாவின் "Untold Truth Of Tamil Genocide" நாளை (08) சிட்னியில் பிளாக் டவுண் நகர நூலக மண்டபத்தில் வெளியீடு

1 month ago



தமிழினப் படுகொலையின்          சாட்சியும், 2009 வன்னி போர்க்களத்தில் இறுதிவரை பணியாற்றிய மருத்துவர்களில் ஒருவருமான மருத்துவர் வரதராஜாவின் "Untold Truth Of Tamil Genocide" நாளை (08) சிட்னியில் பிளாக் டவுண் நகர நூலக மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.

'தமிழினப் படுகொலையின்      சொல்லப்படாத உண்மைகள் எனும் வைத்தியர் துரைராஜா வரதராஜாவின் வாழ்க்கை வரலாறு நூல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட், மெல்பேர்ண நகர்களில் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

இறுதிப் போரில் தாயக மக்களுக்கு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரவலத்தின் போது மகத்தான சேவையாற்றிய மருத்துவரை மதிப்பளிக்கும் வண்ணம் நாளை (08) ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் புத்தக வெளியீடும் நேரடி சந்திப்பு கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன.

சர்வதேசம் எங்கும் ஈழத் தமிழர்களின் பலத்த ஆதரவுடன் வெளியிடப்பட்ட வைத்தியர் துரைராஜா வரதராஜாவின் வாழ்க்கை வரலாறு நூல் ஆங்கில மொழியில் ரஜீ பட்டீசன் எழுதிய 'தமிழினப் படுகொலையின் சொல்லப்படாத உண்மைகள்" என்பது ஈழத் தமிழர்களின் துயரமான வரலாற்றையும். அவர்களுக்கு நிகழ்ந்த                  கொடூரங்களையும் ஆவணமாக்கும் ஒரு முக்கியமான நூலாகும்.

பேரவலம் நிகழ்ந்த        முள்ளிவாய்க்காலின் இறுதி நாள்களில் நடந்த இன அழிப்பு நிகழ்வுகளையும், அதன் மையத்தில் நின்று ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்ற முயன்ற வைத்தியர் துரைராஜா வரதராஜாவின் தியாகத்தையும் இந்த நூல் ஈழத் தமிழர்களின் தனித்துவமான கலாசாரத்தையும், அவர்களின் அடையாளங்களையும் அழிக்க நடத்தப்பட்ட சதியை முழுமையாக வெளிக்கொண்டு வருகிறது.

ஏராளமான பல்லின அரசியல் சூழ்நிலைகளின் விளைவாக ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகள், பங்காளித்துவம், மற்றும் சுயாட்சி ஆகியவற்றுக்காக எப்படி போராடினார்கள் என்பதையும் இந்த நூல் எடுத்துக் கூறுகிறது.

இதுவரை மறைக்கப்பட்ட                  வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தரும் முயற்சியாக இந்த நூல் திகழ்கிறது.

இது வரலாற்றை மறக்காமல் அதன் பாடங்களை ஆழமாகப் புரிந்து கொள்ளுமாறு இளைய தலைமுறையினருக்கு புகட்டும் ஒரு படைப்பாக இது விளங்குகிறது.

ஈழத் தமிழர்களின் துயர அனுபவங்கள். அவர்களது எதிர்கால சுதந்திரத்துக்கான போராட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தன என்பதையும், எந்த சூழலிலும் மனிதநேயத்தை உயர்த்தி நிறுத்தும் பொறுப்பை உணர்த்துகிறது.

வைத்தியர் துரைராஜா வரதராஜா ஈழத் தமிழர்களின் உண்மையான மனிதநேய வைத்தியராக திகழ்கிறார்.

அவர் காட்டிய தியாகம், உலகமெங்கும் தமிழ் இனத்தின் எதிர்காலத்துக்கு நம்பிக்கை மற்றும் நீதி தேடும் சான்றாக உள்ளது.

ஆங்கில பதிப்பு மூலம் இந்த நூல், ஈழத் தமிழர்களின் துயர வரலாற்றை உலகளாவிய அரங்கில் கொண்டு சேர்க்கும் ஓர் அரிய    முயற்சியாக திகழ்கிறது.

தாயக மக்களுக்கு முள்ளிவாய்க்கால்  இனப்படுகொலை பேரவலத்தின் போது மகத்தான சேவையாற்றிய மருத்துவருக்கு மதிப்பளிக்க இந்த நிகழ்வை ஆஸ்திரேலிய தமிழ்      காங்கிரஸ் ஒழுங்கமைத்துள்ளது.

அண்மைய பதிவுகள்