அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பதவி விலகுவதற்கு முன்பு, இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் ஆயுத விற்பனை முன்மொழிவு

3 days ago



அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பதவி விலகுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் ஆயுத விற்பனையை முன்மொழிந்துள்ளார்.

இஸ்ரேலியப் படைகள் நேற்று சனிக்கிழமை காசா பகுதி முழுவதும் மேற்கொண்ட சுமார் 30 தாக்குதல்களில் 70 பலஸ்தீனியர்கள் உயிரிழநந்துள்ளனர்.

குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறாயினும் காசாவில் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை பற்றிய பரவலான விமர்சனங்களை புறக்கணித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பதவி விலகுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் ஆயுத விற்பனையை முன்மொழிந்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்துள்ள நிலையில் இதுவரை 45,658 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 108,583 பேர் காயமடைந்துள்ளன.