நாட்டைக் கட்டியெழுப்பும் குழு தன்னிடம் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறைவேற்றும் திறனும் அர்ப்பணிக்கப்பட்ட திறமையான குழுவும் தன்னிடம் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
எங்களின் உறுதியை அசைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட் டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், ஓர் ஐக்கிய அணியாக நாட்டை கட்டியெழுப்பும் பங்கை நிறைவேற்றும் திறன் எங்களிடம் உள்ளது.
மேலும் இந்த பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட திறமையான குழுவையும் நாங்கள் கொண்டுள்ளோம்.
அத்துடன், எங்களின் உறுதியை அசைக்க முடியாது.
அதேவேளை, அனைத்து குடிமக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில் சட்டத்தை மதிக்கும் தேசத்தை உருவாக்குவதற்கும் ஒழுக்கமான சமுதாயத்தை வளர்ப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உயிர்ப்பிக்கிறது - என குறிப்பிட்டுள்ளார்.