வெடி கொளுத்தி மோடி வெற்றியை கொண்டாடிய யாழ்.சிவசேனையினர்

7 months ago

இந்திய மக்களவைத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க. வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு மற்றும் பலகாரங்கள் வழங்கியும் கொண்டாடப்பட்டுள்ளது.

ஏழு கட்டங்களாக இடம்பெற்ற, இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த முதலாம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.

நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

பா.ஜ.க. கட்சியினர் 272க்கும் கூடுதலான தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த போது, பிரதமர் மோடி வெற்றிபெற்றுவிட்டதாகத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சிவசேனையினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோதகம், லட்டு போன்ற இனிப்புப் பண்டங்கள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுக்கும், வீதியால் சென்றவர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பரிமாறப்பட்டன.

இறுதியாக வெடி கொளுத்தியும் அவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.