முத்து மகேந்திரா எழுதிய "கந்த புராண அமிர்தம்" என்ற நூல் வெளியீட்டு விழா

2 months ago



வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்னாள்              வண்ணக்கர் கலாபூஷணம் தம்பி முத்து மகேந்திரா எழுதிய "கந்த புராண அமிர்தம்" என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவசிறீ சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும் ஆலய குரு சிவ சிறீ அங்குசநாதக் குருக்கள் ஆகியோருக்கு முதல் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர், ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் மற்றும் வண்ணக்கர் வன்னியசிங்கம் ஜயந்தன்            ஆகியோருக்கு பிரதிகள்  வழங்கப்பட்டன.

தொடர்ந்து, எழுத்தாளர் மகேந்திராவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைய பதிவுகள்