











யாழில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தைப்பொங்கல் விழாவை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது.
இராசபோசனம் என்ற கருப்பொருளில் நடைபெறும் இச் சிறுதானியப் பொங்கல் விழா இம்முறை யாழ்.ஊரெழு வளர்பிறை சனசமூக நிலைய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16.02.2025) மாலை மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வளர்பிறை சனசமூக நிலையத்தின் தலைவர் மு. ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் பங்கேற்றிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாகப் பசுமை இயக்கத்தின் கலை, இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை. சரவணன், சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ், பொருளாளர் க.கேதீஸ்வரநாதன் நாவலம்பதி ஞானவைரவர் ஆலயத்தின் தலைவர் இ.ராதா ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான உறியடியோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இச்சிறுதானியப் பொங்கல் விழாவில் சாமை மற்றும் வரகு அரிசிப் பொங்கல்களும் குரக்கன் கூழும் பரிமாறப்பட்டன.
தமிழர்களின் உணவுப் பண்பாட்டில் சிறுதானியங்கள் அருகிவரும் நிலையில், மீளவும் அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலேயே சிறுதானியப் பொங்கல்விழா தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் ஆண்டுதோறும் எழுச்சிபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
