பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு படகில் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 months ago


பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு ஆங்கில கால் வாயை கடக்க முயன்ற போது, சிறு படகு ஒன்று கவிழ்ந்ததில் 8 புலம்பெயர் மக்கள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேற்படி விபத்தானது நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

சிறு படகுகளில் பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் புலம்பெயர் மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றன.

பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் பொருட்டு பல ஆயிரம் யூரோ தொகையை ஆட்கடத்தல் நபர்களுக்கு செலவிட்டு சிறு படகுகளில் இடம் பிடிக்கின்றனர்.

இந்த விபத்தானது படகு புறப்பட்ட சில மணி நேரத்திலேயே நடந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறு படகுகளில் மேற்கொள்ளும் அபாயகரமான பயணத்தை சமீப நாள்களில்          பலமுறை புலம்பெயர்ந்தோர் முன்னெடுத்துள்ளனர் என கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில், கடந்த 2 நள்களில் மட்டும் 24 மணி நேரத்தில் 200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வடக்கு பிரெஞ்சு கடற்கரையில் அதிகளவான மக்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று இந்த மாதம் கவிழ்ந்ததில் குறைந்தது 12 புலம்பெயர்ந்தோர் இறந்தனர்.

இதில், பெரும்பாலானோர் எரித்திரியாவை சேர்ந்தவர் என்றே கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஆங்கில கால்வாயை கடக்கும் முயற்சியில் 37 புலம்பெயர் மக்கள் இறந்துள்ளனர். 2023 இல் இறப்பு எண்ணிக்கை வெறும் 12 என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்கு சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்