கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் தர்மபுரம் வைத்தியசாலையில்

2 months ago



கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் தர்மபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி, கண்ணகிபுரம் பகுதியிலுள்ள வீதியில் இருந்த குளவிக்கூடு கலைந்தமையால், வீதியால் சென்ற பாடசாலை மாணவர்கள் 9 பேரும், வீதியால் பயணித்தவர்கள் மேலும் 6 பேரும் கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கண்ணகிநகர் அம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்