யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று(10) முற்பகல் இடம்பெற்றது.
2 months ago






யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று(10) முற்பகல் இடம்பெற்றது.
தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன் புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள்.
அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம்.
அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது.
இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மரபுசார் பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வருகிறது.
இப்புதிர் விழா 291ஆவது ஆண்டாக இவ்வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
