இலங்கையில் பாராளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் இழந்துள்ளனர்.

3 months ago


பாராளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதிய                   பாராளுமன்ற உறுப்பினர்கள்   உள்ளடங்கலாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 85 பேர் ஓய்வூதியத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 ஆவது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் குறித்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக முன்கூட்டி கலைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் ஐந்து                  ஆண்டுகளை நிறைவு செய்யும் உறுப்பினர் ஒருவருக்கு அவரது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு  ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது.

மேலும் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஓய்வூதியம் பெறுவதற்கு உரித்துடையவர்.

1977 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஓய்வூதிய சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு உரித்துடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக குறித்த பாராளுமன்ற                   உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஏனைய வரப்பிரசாதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்