பாகிஸ்தான் ஜனாதிபதி துபாய் விமானத்திலிருந்து இறங்கும்போது திடீரென கால் இடறி விழுந்ததில் காலில் எலும்பு முறிந்தது
2 months ago
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி துபாய் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கும்போது திடீரென கால் இடறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கடந்த 30-11-2024 துபாய் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அவரது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
" பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு வைத்தியர்கள் சர்தாரின் காலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.