பிரான்ஸில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யாழில் கைது

1 month ago



பிரான்ஸில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி         பணம் மோசடி செய்த சம்பவத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (12) யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய  முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை பிரான்ஸில் தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது. 

அவரிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் எதுவும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 49 வயது நபராவார். 

இவர் நாளைய தினம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சைக் குழு ஒன்றின் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்