நினைவேந்தலைத் தடுப்பதற்கு நீதிமன்றம் செல்வதை தவிர்க்கவும் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்து
அமைதியான முறையில் மேற்கொள்ளும் நினைவேந்தலைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பெறுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் தெஹிதினிய, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் கடிதம் ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி மட்டக்களப்பு, சேனையூர் புவனேஸ்வரி அம்மன் கோயில் முன்றிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய பல்கலைக்கழக மாணவி கைது செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.
விளக்கம் கோரி அனுப்பியுள்ள கடிதத்திலேயே ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் தெஹிதினிய மேற்கண்டவாறு வலியு றுத்தியுள்ளார்.
சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் பிரகாரம் மரணித்த ஒருவரை நினைவுகூர்வது ஒருவரது அடிப்படை உரிமை.
அந்த வகையில் தமிழ் மக்கள் அஞ்சலி ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு உரித்துடையவர்கள்.
இனரீதியான பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டாத, தேசிய, இன அல்லது மத வெறுப்புணர்வை ஆதரிக்காத செயல்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.
எந்தவொரு அமைதியான நினைவேந்தல் நடவடிக்கைகளையும் தடுக்கும் நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவதைத் தவிர்க்கவேண்டும் என்று வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட நிர்வாகப் பிரிவுகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தக் கடிதத்தின் பிரதிகளை மும்மொழிகளிலும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்புங்கள்” என்று அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
