யாழில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் போது ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்கு இடையூறு
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மழை பெய்து வருவதால் ஊடகவியலாளர் நிற்பதற்கு அங்கு ஒரு இடம் ஒதுக்கப்படவில்லை. அவர்களின் மோட்டார் சைக்கிள் கூட பாதுகாப்பாக விடுவதற்கு இடமில்லை.
புதிதாக வந்த யாழ்.மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபன் ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ஊடகவியலாளர்கள் சிரமமின்றி செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு வசதிகளை செய்து கொடுத்தார்.
இது சம்பந்தமாக ஊடகவியலாளர்களை ஒன்று திரட்டி ஒரு கூட்டமும் நடத்தி எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டாலும் தன்னிடம் அறிவிக்குமாறும் கூறினார்.
ஆனால் இன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அதனை செய்தியாக்குவதற்கான வசதிகளை அரச அதிபர் செய்யவில்லை.
மழைக்குள் ஒதுங்க இடமில்லாமல் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டனர். ஊடகவியலாளர் பயன்படுத்தும் கமெராவின் விலைக்கு அளவு சம்பளம் என்பது குறைவு.
கமெராவுக்குள் மழைத் தண்ணீர் போனால் அந்த இழப்பீட்டை யார் கொடுப்பார்கள். மாவட்ட செயலகம் கொடுக்குமா?
ஊடகவியலாளர் பணி செய்வதற்கு இடையூறு இன்றி அனுமதிக்கும் இடங்களில் ஊழல் மோசடிகள் இல்லை என்பது வெளிச்சம்.