அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
இதன்படி அந்த நாட்டில் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸூம், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணம், மில்வாகி நகரில் நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசார கூட்டத்தில் கமலா ஹாரிஸ் உரையாற்றும் போது,
"எனது தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து மட்டுமே பேசி வருகிறேன்.
குறிப்பாக சுகாதார திட்டங்கள், குறு, சிறு தொழில்களின் வளர்ச்சி, நடுத்தர வர்க்க மக்களின் முன்னேற்றம் குறித்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளேன்.
ஆனால், டொனால்ட் ட்ரம்ப், பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து பேசி வருகிறார்.
மனித குலத்துக்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார் என்று தெரிவித்தார்.