போலி விசாக்களில் கட்டாருக்கு செல்ல முற்பட்ட 8 பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
6 months ago

சேர்பிய நாட்டுப் போலி விசாக்களை பயன்படுத்தி கட்டாருக்கு தப்பிச்செல்ல முற்பட்ட 8 பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டார் நோக்கிச் செல்லவிருந்த விமானத்தில் ஏறுவதற்கு முற்பட்டபோதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், சேர்பியாவுக்கு செல்வதற்காக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் 6 பங்களாதேஷ் பிரஜைகள் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
