நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன் என்று டில்லி முதல்வர் தெரிவிப்பு.

3 months ago


நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன் என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லி அரசின் மதுபான கொள்கையை அமுல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பில் கடந்த மார்ச் 21ஆம் திகதி கெஜ்ரிவாலை அமுலாக்கத்துறை கைது செய்தது.

இந்த நிலையில் பிணையில் வெளிவந்துள்ள கெஜ்ரிவால் கெஜரிவா தனது பிணைக் காலத்தில் தனது அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

ஆளுநரின் ஒப்புதல் பெற தேவையில்லாத பட்சத்தில், கோப்புகளில் அவர் கையெழுத்திடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. சாட் சிகளுடன் பேசக்கூடாது என்றும் கூறியது.

இந்த நிலையில் டில்லி முத லமைச்சர் பதவியில் இருந்து இரண்டு நாட்களில் விலகவுள் ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டில்லியில் ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசிய கெஜ்ரிவால் மேற்கண்டவாறு கூறினார்.