காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்களில் தஞ்சம்
1 month ago
காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் தற்போது அத்தியாவசிய தேவைகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் மக்கள் பாரிய அசெளகரியங்களைச் சந்தித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.