
தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புக்களைத் தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த அமைப்புக்களின் நிதி மற்றும் பொருளாதாரச் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், பயங்கரவாதத்துடன் தொடர் புடைய 222 நபர்களின் பெயர் பட்டியலையும் அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
