இலங்கையில் ஊழல்வாதிகளான அமைச்சர்களின் மனைவிமார் பிள்ளைகள் இரவோடு இரவாக இலங்கையை விட்டு தப்பியோடியுள்ளனர்.
இலங்கையில் ஊழல்வாதிகளான அமைச்சர்களின் மனைவிமார் பிள்ளைகள் இரவோடு இரவாக இலங்கையை விட்டு தப்பியோடியுள்ளனர்.
நிதிமோசடியில் ஈடுபட்ட அமைச்சர்கள், எம்.பிக்களின் மனைவிகள் பிள்ளைகள் இலங்கையை விட்டு தப்பியோடியுள்ளனர்.
மனைவியின் பெயர்களில் வங்கிக் கணக்கினை திறந்து அந்தக் கணக்கில் ஊழல் செய்யும் பணத்தை போட்டு வந்துள்ளனர்.
ஆட்சி மாறியதும் அதாவது அநுர ஜனாதிபதியாக வந்ததும் தம்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த அரசியல்வாதிகளின் மனைவிகள், பிள்ளைகள் இரவோடு இரவாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த பல அரசியல்வாதிகள் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி அதிசொகுசு வாகனங்கள் அதிவேகமாக பயணித்த பல காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், பாரிய ஊழல், மோசடிகள் மற்றும் பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தியா, சிங்கபூர், தாய்லாந்து, டுபாய் போன்ற நாடுகளுக்கு அவர்கள் அவசரமாக சென்றுள்ளனர்.
இலங்கையில் ஊழலுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக சூளுரைத்த அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகி உள்ள நிலையில், இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
பல அரசியல்வாதிகள் தமது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.