முல்லைத்தீவு மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது






























































முல்லைத்தீவு மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது
சமூக சேவைகள் திணைக்களமும் (மத்திய) முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி நேற்று(06) மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து சமூக சேவை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் உடல் உள ஆரோக்கியத்தைப் பேணிடவும் திறமையானவர்களை இனங்கண்டு மாகாண மற்றும் தேசிய போட்டிகளில் பங்குபெறச் செய்து சர்வதேச அளவில் சாதனையாளரை உருவாக்கிடும் நோக்கில் குறித்த போட்டியானது நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய இந்த நிகழ்வில் வடக்கு மாகாண மகளீர் விவகாரம் புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு பரிசில்களும் வழங்கிக் கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள்,உதவித் திட்டமிடல், சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஏனைய உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர், பணிப்பாளர், மாவட்ட சமூக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் முல்லைத்தீவு, வரோட் மாவட்ட இணைப்பாளர், ஆலோசகர் CBID நிகழ்ச்சித் திட்டம், Child fund SriLanka, நாளைய முல்லைத்தீவு அமைப்பின் தலைவர், சட்ட ஆலோசகர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
