யாழில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்களி கேள்விக்கு பதில் இல்லை

2 months ago



யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமர சூரிய பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கப்படாத வலிகாமம் வடக்கு காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.

பிரதமர் பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் உடுவில் தொகுதி மக்கள் சந்திப்பு ஏழாலை ஏழு கோயிலடியில் நேற்று மாலை நடைபெற்றது. 

நூற்றுக்கணக்கான மக்கள் கூடிய இந்தச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான கபிலன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இறுதியாக பிரதமர் ஹரிணி அமர = சூரிய தேசிய மக்கள் சக்தி அரசின் வேலைத் 5 திட்டம் தொடர்பில் உரையாற்றினார்.

அந்த உரையில், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவாகரம் உள்ளிட்டவை  தொடர்பாகப் பிரதமர் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

இந்நிலையில், பிரதமர் உரையாற்றி விட்டு மேடையில் இருந்து இறங்கி மக்களைச் சந்திக்க அருகில் வந்தார்.

இதன்போது பிரதமரைச் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாகப் பேசக் காத்திருந்த காணி உரிமையாளர் ஒருவர், பலாலி பகுதியில் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக தனது ஆதங்கத்தைப் பிரதமரிடம் நேரடியாகத் தெரிவித்தார்.

இதன்போது பிரதமர் ஏனையவர்களுடன் பேசச் சென்றபோது குறித்த காணி உரிமையாளர், "உங்கள் அரசியலுக்காக எங்களைப் பயன்படுத்த வேண்டாம்” - என்று தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தெரிவித்தார்.

இதன்போது பிரதமரைச் சூழ்ந்திருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த காணி உரிமையாளரை அங்கிருந்து அகற்றியதுடன் அதனைக் காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் குழப்பமான நிலைமை ஏற்பட்டது.

இதனையடுத்து பிரதமர் ஹரிணி = அமரசூரிய பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

அண்மைய பதிவுகள்