யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள நிறுவனத்தில் நகைகள் மாயம், இரண்டு யுவதிகள் கைது

2 months ago



யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை தங்கநகைகள் மாயமான சம்பவம் தொடர்பில் இரண்டு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்க நகைகள் மாயமானமை தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

ஊழியர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரு யுவதிகள் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு மருதங்கேணிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார். இன்று புதன்கிழமை அவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.