ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள,பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது.
சி.வி.விக்கினேஸ்வரன், தலைமையிலான, தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான, த.சிற்பரனால், பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார் என கடந்த 8ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பிலான அறிவிப்பு ந.ஶ்ரீகாந்தாவால் வெளியிடப்பட்டது.
ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று அண்மையில் தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது.
சிவில் சமூக கட்டமைப்பினருடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் தேசிய பசுமை இயக்கம்,தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவளிக்கவுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
