இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த காஸா நகரில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சில சடலங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் பிரதானி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய செய்தி தொடர்பாளர் கூறுகையில், குறித்த பாடசாலை கட்டிடம் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக அண்டை நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன